செம்மரம் வெட்ட சென்ற 5 சிறுவர்கள் உட்பட 21 தமிழர்கள் கைது : லாரியை பறிமுதல் செய்து ஆந்திர போலீசார் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2021, 5:05 pm
Thirupathi Arrest - Updatenews360
Quick Share

ஆந்திரா : செம்மரம் வெட்ட தமிழகத்தில் இருந்து திருப்பதி வந்த 5 சிறுவர்கள் உள்பட 21 பேர் கைது செய்த போலீசார் கடப்பாரை, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பதியில் செயல்பட்டுவரும் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் இன்று அதிகாலை புத்துரை அடுத்த உள்ள சுங்கச்சாவடி அருகே வாகன சோதனை நடத்தி வந்தனர்.

அப்போது தமிழகத்தில் இருந்து வந்த ஒரு லாரியை சோதனையிட்டபோது லாரிக்குள் 20க்கும் மேற்பட்டோர் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் சேசாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து லாரியில் உள்ள ஓட்டுநர் உள்பட 21 பேரை கைது செய்த செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 5 சிறுவர்கள் இருப்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜமுனாமத்துரை சேர்ந்த மேஸ்திரி அமரேசன் என்பவர் அழைத்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து கடப்பாரை, கோடாரி மற்றும் உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்து 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து 5 பேரை சிறுவர்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேஸ்திரி அமரேசனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Views: - 354

0

0