மத்திய பிரதேசத்தில் கனமழையால் வெள்ளம்: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு..!!

Author: Aarthi Sivakumar
8 August 2021, 9:50 am
Quick Share

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இம்மாநிலத்தின் வடக்கு பகுதிகளான குவாலியர், ஷிவபுரி, ஷியோபூர், பிந்த் மற்றும் மொரேனா ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

விவசாய நிலங்கள் முற்றிலும் மூழ்கி பயிர்கள் நாசம் அடைந்தன. மழை மற்றும் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Views: - 335

0

0