நாட்டில் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை: உத்தரபிரதேசம் தான் முதலிடம்…மத்திய கல்வி அமைச்சர் தகவல்..!!

Author: Aarthi Sivakumar
3 August 2021, 8:53 am
Quick Share

புதுடெல்லி : நாடு முழுதும் 24 போலி பல்கலைகள் இயங்கி வருவதாக யு.ஜி.சி. எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்துள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் மத்திய கல்வி அமைச்சரும் பா.ஜ.வைச் சேர்ந்தவருமான தர்மேந்திர பிரதான் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது, மாணவர் பெற்றோர் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் வந்த புகார்களின்படி நாடு முழுதும் 24 போலி பல்கலைகள் இயங்கி வருவதை யு.ஜி.சி. கண்டறிந்துள்ளது.

யு.ஜி.சி.யின் அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் இரண்டு பல்கலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 8 பல்கலைக்கழகங்கள், டெல்லியில் 7 பல்கலைக்கழகங்கள், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2, புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 327

0

0