2,550 படிக்கட்டில் அங்கப்பிரதட்சணம் செய்த பக்தர் : 4 நாட்களாக உருண்டு ஏழுமலையானை வழிபட்டார்!!!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2021, 4:17 pm
திருப்பதி : சீனிவாச மங்காபுரத்தில் இருந்து 2550 படிக்கட்டுகள் வழியாக அங்கப்பிரதட்சணம் செய்து திருப்பதி மலைக்கு சென்ற பக்தர்.
திருப்பதியை சேர்ந்த பொன்னால பிரபாகர் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முஜ் திருச்சானூரில் இருந்து திருமலைக்கு 3500 படிக்கட்டுகள் கொண்ட அலிபிரி படிக்கட்டு பாதை வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு நான்கு நாட்கள் அங்கப்பிரதட்சணம் செய்து சென்று திருப்பதி மலையை அடைந்தார்.
அதன்பின் காளஹஸ்தியில் உள்ள கண்ணப்ப நாயனார் மலையை நான்கு நாட்கள் அங்கபிரதட்சணம் செய்து கிரிவலம் சென்றார். தொடர்ந்து இன்று திருப்பதி அருகிலுள்ள சீனிவாசமங்காபுரம் படிக்கட்டு பாதை வழியாக 1550 படிக்கட்டுகள் வழியாக அங்கப்பிரதட்சணம் செய்தவாறு திருப்பதி மலையை அடைந்தார்.
படிக்கட்டுப் பாதை வழியாக அங்கபிரதட்சணம் செய்து பக்தர் ஒருவர் திருப்பதி மலைக்கு செல்வதை பார்த்த மற்ற பக்தர்கள் அவருடைய பக்தியை பார்த்து வியந்து நின்றனர்.
0
0