புதிய பாராளுமன்ற கட்டுமானப் பணிகள்..! 3 நிறுவனங்கள் தேர்வு..! நிதி ஏலங்களை சமர்ப்பிக்க உத்தரவு..!

13 August 2020, 10:28 am
Parliament_UpdateNews360
Quick Share

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான போட்டிகளில் இருந்த ஏழு நிறுவனங்களில், மூன்று நிறுவனங்கள் மட்டும் ஆன்லைன் நிதி ஏலங்களை சமர்ப்பிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பொதுப்பணித் துறை (சிபிடபிள்யூடி) தெரிவித்துள்ளது.

லார்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி), ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனி பிரைவேட் லிமிடெட் மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் ஆகியவை புதிய நாடாளுமன்ற வளாகத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற ஆன்லைன் நிதி ஏலங்களை சமர்ப்பிக்க தகுதியுடையவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் புதியதாகக் காட்டப்படும் நாடாளுமன்றம், மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 10 தேதியிட்ட சிபிடபிள்யூடியின் பின் இணைப்பு எண் 23’ன் படி, மொத்தம் ஏழு முன் தகுதி டெண்டர்கள் பெறப்பட்டன. அவை ஜூலை 14 அன்று திறக்கப்பட்டன. மேலும் தகுதிக்கான ஆரம்ப நிபந்தனைகளின் படி அவை ஆராயப்பட்டு, நிதி ஏலங்களை சமர்ப்பிக்கக்கூடிய மூன்று நிறுவனங்களை சிபிடபிள்யூடி தேர்ந்தெடுத்தது.

ஐ.டி.டி சிமென்டேஷன் இந்தியா லிமிடெட் மற்றும் என்.சி.சி லிமிடெட் ஆகியவை புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் நான்கு நிறுவனங்களில் ஒன்றாகும்.

பாராளுமன்றத்தின் முன்மொழியப்பட்ட புதிய கட்டிடம் இரண்டு மாடி கட்டடமாக இருக்கும். இந்திய சுதந்திரத்தின் 75’ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 2022’ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தயாராக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

முன்னதாக மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்திற்காக நிலத்தைப் பயன்படுத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்த டெல்லி அபிவிருத்தி ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதனால் பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், மத்திய விஸ்டா திட்டத்தின் பிற திட்டங்களையும் விரைவாக முடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 3

0

0