இந்த டீல் நல்லா இருக்கே – ஜார்க்கண்ட் போலீஸ்ன்னா போலீஸ் தான்

17 February 2021, 12:08 pm
Quick Share

திருமணமான நிலையிலும், மற்றொரு இளம் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், போலீசார் எடுத்த நடவடிக்கை, விவாதப் பொருளாக மாறி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை அடுத்த கோகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் மஹட்டோ. இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ராஜேஷூக்கு, இளம்பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. தான் திருமணம் ஆகாதவன் என்று பொய் சொல்லி, அந்த இளம்பெண்ணை, ராஜேஷ் ஏமாற்றி வந்துள்ளார். ராஜேஷ், மனைவி மற்றும் பெண் நண்பரை ஏமாற்றி வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இவர்கள் ராஜேஷ் மீது ராஞ்சி போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகார் தொடர்பாக, டைய்னிக் ஜக்ரான் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, போலீசார், இந்த புகார் மீது நடத்திய விசாரணையின் முடிவில், 3 நாட்கள் மனைவி வீட்டிலும், அடுத்த 3 நாட்கள் பெண் நண்பரின் வீட்டிலும், எஞ்சிய ஒரு நாள் விரும்பிய இடத்தில் இருக்க முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தமும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. ராஜேஷ், தன்னை திருமணம் செய்ய சம்மதிக்காமல் உடலுறவுக்கு நிர்பந்திக்கிறார் என்று, பெண் நண்பர், ராஜேஷ் மீது போலீசில் புகார் அளித்ததும், அவரை கைது செய்ய வாரண்டை போலீசார் பிறப்பிக்கின்றனர்.

இதனை அறிந்த ராஜேஷ், முதல் மனைவியின் உதவியால் தற்போது தலைமறைவாகி உள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ராஜேஷ் விவகாரத்தில், போலீசாரின் நூதன நடவடிக்கை, பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Views: - 16

0

0