7,000 கி.மீ. தொடர் பயணம்: இந்தியா வந்தடைந்த மேலும் 3 ரபேல் போர்விமானங்கள்..!!

28 January 2021, 9:25 am
rabel - updatenews360
Quick Share

புதுடெல்லி: பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இன்று இந்தியா வந்து சேர்ந்தன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2016ம் ஆண்டு அந்த நிறுவனத்திடம் 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதில் இரண்டு கட்டமாக 8 ரபேல் விமானங்கள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் மேலும் 3 விமானங்கள் பிரான்சில் இருந்து புறப்பட்டு, இடையில் எங்கும் நிற்காமல் சுமார் 7,000 கி.மீ. பயணம் செய்து இன்று இந்தியா வந்து சேர்ந்தன. இந்த விமானங்களில் நடுவானில் எரிபொருள் நிரப்புவதற்காக ஐக்கிய அரபு அமீரக விமானப் படையின் டேங்கர் விமானம் உதவி செய்தது. மேலும் 3 ரபேல் விமானங்கள் இணைந்திருப்பது இந்திய விமானப்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நிறுவனத்திடம் இந்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தின்படி அனைத்து ரபேல் விமானங்களும் 2022ம் ஆண்டுக்குள் இந்தியா வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0