தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்கள் : தேர்தலை நடத்த கோரி திமுக மனு..!

16 June 2021, 6:13 pm
TR Baalu- Updatenews360
Quick Share

டெல்லி : தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்த கோரி திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் வைத்தியலிங்கம், முனுசாமி ஆகியோர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் ஏற்கனவே வகித்த வந்த எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், அதிமுக எம்.பி. முகமது ஜான் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

இதனால், தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான இடம் காலியாக இருந்தது. இதையடுத்து இங்கு தேர்தல் நடத்த வேண்டும் என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு திமுக எம்.பி வில்சன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனுவை அளித்துள்ளனர்.

இந்த நிலையில் தேர்தல் அணையத்தில் மனு அளித்த திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, தேர்தல் ஆணையம் இந்த மூன்று இடங்கல் தேர்தலை நடத்த வேண்டுமென்றே தாமதம் செய்தவாக குற்றம்சாட்டினார். தற்போது பெரும்பான்மை திமுகவுக்கு உள்ளதால் 3 எம்பிக்களுக்கான தேர்தலில் நிச்சயம் திமுக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.

Views: - 226

0

0