நாடு முழுவதும் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்: ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் வருகை..!!

14 June 2021, 10:31 am
Oxygen Train- Updatenews360
Quick Share

புதுடெல்லி: நாடு முழுவதும் ரயில்கள் மூலம் 30 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்துவ ஆக்சிஜனை டேங்கர்களில் அடைத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் வினியோகிக்கும் பணி, கடந்த ஏப்ரல் 24ம் தேதி தொடங்கியது. இவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுகின்றன.

oxygen_cylinders_updatenews360

நாடு முழுவதும் இந்த ரயில்கள் மூலம் இதுவரை 30 ஆயிரத்து 182 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1,734 டேங்கர்களில் அடைத்து, 421 ரயில்கள் மூலம் இவை விநியோகிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 4 ஆயிரத்து 941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டுள்ளது.

Views: - 180

0

0