வெள்ளத்தில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்: நிலச்சரிவு, பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 35 பேர் பலி..!!

Author: Aarthi Sivakumar
18 October 2021, 5:42 pm
Quick Share

கோட்டயம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

அரபிக்கடல் மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: 17 தமிழர்கள் உயிரோடு புதைந்து சாவு -  அயலகச் செய்திகள் - கருத்துக்களம்

கேரளாவின் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிச்சூர், ஆகிய 5 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனால், நீர் நிலைகளுக்கு அருகில் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் கடந்த 16ம் தேதி ஒருவர் பலியானார். இதேபோன்று, கோட்டயம் நகரின் ஊரக பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய 12 பேரை காணவில்லை.

மூணாறு நிலச்சரிவு: தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 14 பலி - 12 பேர் மீட்பு - 80  பேர் கதி என்ன? | Kerala Rains : Landslide in Idukki district - Tamil  Oneindia

இதனையடுத்து, கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நேற்று 23 ஆக உயர்ந்திருந்த நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை இன்று 35 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 22 பேர் கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்ட இரு நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

வெள்ளப்பெருக்கில் மேலும் பலர் காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Views: - 258

0

0