இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை..? மோடி அரசின் புதிய திட்டம்..!

10 February 2021, 5:10 pm
4_days_work_week_updatenews360
Quick Share

இந்தியாவில் தொழிலாளர் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை மோடி அரசு பரிசீலித்து வருகிறது. ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குப் பதிலாக வாரத்தில் நான்கு வேலை நாட்கள் மட்டுமே இருக்க நிறுவனங்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்க புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் அறிக்கையின்படி, ஒரு வாரத்திற்கு 48 மணிநேர வேலை நேர வரம்பு மாற்றப்படாது.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், வாரத்திற்கு 6 வேலை நாட்கள் இருக்கும். அதே நேரம் ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு 12 மணிநேர வேலையைத் தேர்வுசெய்தால், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை மற்றும் மூன்று நாட்கள் விடுமுறைகளாக இருக்கும்.

“தினசரி வேலை நேரம் அதிகரிக்கப்பட்டால், நீங்கள் தொழிலாளர்களுக்கும் இதேபோன்ற விடுமுறை நாட்களை வழங்க வேண்டும். வேலை நேரம் அதிகரிக்கப்பட்டால் 5 அல்லது 4 வேலை நாட்கள் இருக்கும். இதில் பொருத்தமான ஒன்று ஊழியர்கள் மற்றும் முதலாளிகளால் பரஸ்பர ஒப்புதலுடன் எடுத்துக்கொள்ளலாம்.” என தொழிலாளர் செயலாளர் அபூர்வா சந்திரா கூறினார்.

ஒரு நிறுவனம் 4 நாட்கள் வேலை வாரத்தை வழங்கினால், மீதமுள்ள மூன்று நாட்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று சந்திரா கூறினார். வேலை நாட்களில் நெகிழ்வுத்தன்மை குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

தொழிலாளர் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக அடுத்த சில வாரங்களில் நான்கு புதிய தொழிலாளர் விதிகளை செயல்படுத்த பொருத்தமான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வகுப்பதில் அமைச்சகம் தற்போது ஈடுபட்டுள்ளது என்று சந்திரா கூறினார்.

புதிய தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலன்களை எந்த வகையிலும் சமரசம் செய்யாது என்று அவர் மேலும் உறுதியளித்தார்.

Views: - 0

0

0