ஆந்திராவில் 4 மாத குழந்தை கடத்தி சென்ற பெண் கைது : ரயில் நிலையத்தில் குழந்தையை வைத்து பிச்சை எடுத்த போது சிக்கினார்!!
Author: Udayachandran RadhaKrishnan7 August 2021, 5:59 pm
ஆந்திரா : 4 நாட்களுக்கு முன் திருப்பதியில் கடத்தப்பட்ட 4 மாத குழந்தையை மீட்ட போலீசார் ரயில்வே நிலையத்தில் பிச்சை எடுத்த மைசூரை சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.
ஆந்தி மாநிலம் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பாலாஜி பேருந்து நிலையத்தில் திறந்த வெளியில் தங்கி கிடைத்த வேலைகளை செய்து பிழைப்பு நடத்துபவர் கங்குலம்மா.
அவருக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி அதே பகுதியில் தனக்கு அறிமுகமான மைசூரை சேர்ந்த பெண் ஆ ஷாவிடம் தன்னுடைய மகனை ஒப்படைத்து விட்டு குளிக்கச் சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது இரண்டு பேரையும் காணவில்லை. ஆஷா பேருந்து நிலையத்தில் வரும் பக்தர்களிடம் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தவர் ஆவார்.
இந்த நிலையில் கங்குலம்மா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பதி போலீசார் கை குழந்தையுடன் மாயமான பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் மைசூர் ரயில் நிலையத்தில் ஆஷாவை கண்டுபிடித்து கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு கங்குலம்மாவிடம் ஒப்படைத்தனர்.
0
0