ஐந்து அமைச்சர்கள் உட்பட 33 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா..! பஞ்சாப் அரசை வாட்டி வதைக்கும் தொற்று..!
3 September 2020, 1:58 pmபஞ்சாபில் மேலும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பஞ்சாப் சட்டசபையின் மொத்த எண்ணிக்கையான 117’இல் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பஞ்சாப் அரசியல் வட்டாரங்களை அதிர வைத்துள்ளது.
“அவர்கள் அனைவரையும் விரைவாக மீட்க விரும்புகிறேன். கொரோனாவுக்கு எதிரான போராட்டம் உண்மையானது. மேலும் முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும், சோதிக்கவும், நேர்மறையாகக் காணப்பட்டால், விரைவாக சிகிச்சையைத் தொடங்கவும் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது” என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.
கொரோனா பாதித்த இந்த 33 சட்டமன்ற உறுப்பினர்களில் பஞ்சாப் அரசின் ஐந்து அமைச்சர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பஞ்சாபில் கொரோனா இறப்பு விகிதம் டெல்லியை விஞ்சி 2.8 சதவீதமாக உயர்ந்து நாட்டின் மூன்றாவது மோசமானதாக மாறியுள்ளது. தேசிய கொரோனா இறப்பு வீதம் 1.8 சதவீதமாக உள்ள நிலையில் பஞ்சாபில் இது மிக அதிகமாக உள்ளது பஞ்சாபி அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவுக்கான பஞ்சாபின் நோடல் அதிகாரி ராஜேஷ் பாஸ்கர், இறப்புக்கள் அதிகரிப்பதற்கான காரணம், மக்கள் சோதனைக்கு முன்வராதது மற்றும் அவர்களின் நிலை மோசமடையும் போது மட்டுமே அவர்கள் மருத்துவமனையை நோக்கி வருகிறார்கள் என்பது தான் எனத் தெரிவித்துள்ளார்.
“அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்க விரும்பவில்லை என்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்துமாறு நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.” என்று பாஸ்கர் கூறினார்.
0
0