நீட் தேர்வு: தமிழகத்தில் கூடுதலாக 4 தேர்வு மையங்கள்!

15 July 2021, 5:12 pm
NEET_2021_UpdateNews360
Quick Share

தமிழகத்தில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என சற்று முன்னர் மத்திய அமைச்சர் அறிவித்துள்ளது

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டதாலும், சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டதாலும், இந்த ஆண்டு நீட்தேர்வு இருக்காது என்றே பெரும்பாலான மாணவர்கள் கருதினர். ஆனால் சமீபத்தில் நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தமிழகத்தில் நீட் தேர்வு உண்டு என்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் இந்த ஆண்டு கண்டிப்பாக நீட் தேர்வு உண்டு என்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து தமிழக மாணவர்களும் தற்போது நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்

இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான மையங்கள் அதிகரிக்கப்படும் என்று ஏற்கனவே தேசிய தேர்வு மூலமே தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக மேலும் 4 மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு விருதுநகர் திண்டுக்கல் திருப்பூர் ஆகிய நான்கு நகரங்களில் புதிதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறும் மற்ற மையங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 142

0

0