காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தீவிரதேடுதல் வேட்டை: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

24 February 2021, 5:37 pm
Jammu_Kashmir_UpdateNews360
Quick Share

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் ஷால்குல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள், ஜம்மு காஷ்மீர் போலீசார், மத்திய ரிசர்வ் போலீசார் ஆகியோர் இணைந்து இன்று பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ஷிரிகுபாரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கு இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களது பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 1

1

0