நான்கு வயது சிறுமி உறவினராலேயே சீரழிக்கப்பட்ட கொடூரம்..! ஹத்ராஸில் மீண்டும் ஒரு துயரம்..!

Author: Sekar
14 October 2020, 10:06 am
Minor Girl Rape - updatenews360
Quick Share

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் உள்ள சஸ்னி பகுதியில் நான்கு வயது சிறுமி தனது உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ஒரு தலித் பெண்ணின் கூட்டு பாலியல் பலாத்காரம் தேசத்தையே உலுக்கிய நிலையில், தற்போது அதே மாவட்டத்தில் நான்கு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 வயதான தலித் பெண் கடந்த செப்டம்பர் 14’ஆம் தேதி ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தைச் சேர்ந்த நான்கு ஆண்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பதினைந்து நாட்களுக்குப் பிறகு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

பின்னர் அவரது உடல் ஹத்ராஸுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நள்ளிரவில் அவரது கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. நள்ளிரவு கடந்தும் நடந்த தகனம் அவர்களின் அனுமதியின்றி இருந்ததாகவும், உடலை கடைசியாக ஒரு முறை வீட்டிற்கு கொண்டு வரவும் அனுமதிக்கப்படவில்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கும் வழிவகுத்தது. இதனால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு அஞ்சுவதால் தகனம் விரைவாக நடத்தப்பட்டது என்று நிர்வாகம் வாதிட்டது. இதற்கிடையில், இந்த விவகாரம் தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் உள்ளது.

இந்த விவகாரமே இன்னும் தணியாத நிலையில், தற்போது ஹத்ராஸ் மாவட்டத்தின் சஸ்னி பகுதியில் நான்கு வயது சிறுமி உறவினராலேயே சீரழிக்கப்பட்ட கொடூரம் வெளியாகியுள்ளது.  குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒரு குற்றவாளியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Views: - 70

0

0