மைனர் சிறுமி பாலியல் பலாத்காரம்..! போலீஸ் ஸ்டேஷனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட குற்றவாளி..!

20 September 2020, 8:03 pm
Death_UpdateNews360
Quick Share

மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 40 வயது நபர் ஒருவர் டெல்லியின் சமாய்பூர் பத்லி காவல் நிலையத்தின் லாக்கப்பில் பெட்ஷீட் மூலம் தூக்கில் தொங்கியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒரு கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். 

கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தர்மேந்திரா இந்த ஆண்டு மார்ச் மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார். ஆனால் கொரோனா காரணமாக அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், அவரது பரோல் காலம் நீட்டிக்கப்பட்டது.

அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள புலந்த்ஷாரில் வசிப்பவர். ஆனால் தற்போது டெல்லியின் கதிபூர் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

முன்னதாக ஸ்வரூப் நகர் காவல் நிலையத்தில் நேற்று தர்மேந்திராவுக்கு எதிராக அண்டை வீட்டிற்குள் நுழைந்ததாகவும்,வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் வந்ததை அடுத்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பின்னர், ஸ்வரூப் நகர் காவல் நிலையத்தில் லாக்கப் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்டவர் சமாய்பூர் பத்லி காவல் நிலையத்தின் லாக்கப்பில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் லாக்கப் வாயிலின் கம்பிகளைச் சுற்றி கட்டப்பட்ட பெட்ஷீட் மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் உடனடியாக பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு தகவல் அளிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணையை எளிதாக்கும் வகையில் சி.சி.டி.வி காட்சிகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன என்று டி.சி.பி. தெரிவித்தார்.

அந்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சமாய்பூர் பட்லி காவல் நிலையத்தில் சென்ட்ரி கடமையில் நியமிக்கப்பட்ட கான்ஸ்டபிள் யஷ்வீர், அலட்சியம் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Views: - 0

0

0