ஐசியூவில் நோயாளியை சேர்க்க ஒன்றரை லட்ச ரூபாய் லஞ்சம்..! மகாராஷ்டிராவில் கொடூரம்..!

23 April 2021, 10:01 pm
Arrest_Bribe_UpdateNews360
Quick Share

மகாராஷ்டிராவில் ஒரு மருத்துவமனையின் ஐ.சி.யூ வார்டில் அனுமதிக்க இரண்டு கொரோனா நோயாளிகளிடமிருந்து தலா ரூ 1.50 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தானே போலீசார் இன்று தெரிவித்தனர்.

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. உலகிலேயே மிக அதிக அளவிலான தினசரி பாதிப்புகளை இந்தியா பதிவு செய்துள்ளது.
இதற்கிடையே, போதிய படுக்கைகள் இல்லாமை, ஆக்சிஜன் சப்ளையில் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை இந்தியா தற்போது எதிர்கொண்டு வருகிறது.

இந்த கொடிய சுகாதார அவலம் உள்ள நிலையிலும், பணத்திற்காக சிலர் ஆக்சிஜன் சிலிண்டர், ரெம்டெசிவிர் ஊசிகளை கள்ளச் சந்தையில் விற்று போலீசிடம் சிக்கிய சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், தற்போது ஐசியூவில் படுக்கைக்கு லஞ்சம் கேட்ட கொடூர சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது.

கொரோனா சிகிச்சை இலவசமாக உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டு பேர் சேர்க்கை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தானே மேயர் நரேஷ் மஸ்கேவுக்கு புகார் அளித்ததை அடுத்து, அவர் தானே நகராட்சி நிறுவனத்திடம் போலீசில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“இந்த வழக்கில் தற்போது வரை எவரும் கைது செய்யப்படவில்லை. மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்கள் மீது மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்று கபுர்பாவடி காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

Views: - 559

0

0