குஜராத்தில் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: 5 பேர் பலியான சோகம்…!!

27 November 2020, 1:37 pm
death
Quick Share

ராஜ்கோட்: குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் வேறொரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டு உள்ளார்.

Views: - 18

0

0