அதி வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதி பயங்கர விபது : 5 பேர் உடல் நசுங்கி பலி.. 7 பேர் படுகாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2021, 1:48 pm
Accident 5 Dead - Updatenews360
Quick Share

ஆந்திரா : அனந்தபுரம் அருகே கார், ஆட்டோ நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஆட்டோவில் பயணித்த 5 பேர் பலியான நிலையில் காரில் பயணித்த 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள கும்மகட்டா பகுதியை சேர்ந்த 11 பேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த ஆட்டோ பூலகுண்ட்டா அருகே சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த கார் நேருக்கு நேர் ஆட்டோ மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

மித மிஞ்சிய வேகத்தில் வந்து கொண்டிருந்த கார் மோதி ஆட்டோ நொறுங்கியது. மோதிய வேகத்தில் காரும் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களில் ஆட்டோவில் பயணித்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்தார். காரில் பயணித்தவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் ராயதுர்க்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 261

0

0