ராஜஸ்தான் சட்டப்பேரவை: 6 சட்டதிருத்த மசோதாக்கள் தாக்கல்..!!

1 November 2020, 12:35 pm
rajastan - updatenews360
Quick Share

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 6 சட்டதிருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளை கட்டாயப்படுத்தி குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக விளைபொருட்களை வாங்க ஒப்பந்தம் போட்டால், 3 முதல் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் வகை செய்யும் மசோதா, ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், 6 சட்டதிருத்த மசோதாக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் விளைபொருட்களை வாங்கி 3 நாட்களுக்கு பிறகும் பணம் கொடுக்காத வியாபாரிகளுக்கும் தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த 6 மசோதாக்களில் 4 மசோதாக்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை மீறும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் நாளை நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.

Views: - 16

0

0