உத்தரபிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்..! 6 பேர் பலியான பரிதாபம்..!
26 August 2020, 1:10 pmஉத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் லக்னோ-ஹார்டோய் தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.
இந்த விபத்தால் 12’க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். பேருந்துகள் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
ஒரு பஸ் ஹர்தோயிலிருந்து லக்னோவுக்கு வந்து கொண்டிருந்தபோது, மற்றொன்று மாநில தலைநகரிலிருந்து ஹார்டோய் நோக்கிச் சென்றது.எதிரெதிர் திசைகளில் இருந்து வந்த இரண்டு பேருந்துகளும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.
இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்து காயமடைந்தவர்களை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தை உத்தரபிரதேச மாநில சாலைபோக்குவரத்து அதிகாரிகளும் அடைந்துள்ளனர்.
இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார் மற்றும் காயமடைந்தவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து மூன்று பேர் கொண்ட குழு விசாரணைக்கு மாநில சாலிபோக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தனது அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.