ஆழ்துளை கிணற்றில் கலந்த கழிவுநீர்: மாசடைந்த நீரை குடித்த 6 பேர் பரிதாப பலி…100க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை..!!
Author: Aarthi Sivakumar5 October 2021, 5:31 pm
கர்நாடகா: மகராபி கிராமத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
விஜயநகர் மாவட்டத்தில் உள்ள மகராபி கிராமத்தின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் பொருட்டு அங்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. அதில் இருந்து மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
அப்படி விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவுநீரும் கலந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனை குடித்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 5 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், நேற்று கெஞ்சம்மா என்ற 65 வயது மூதாட்டியும் உயிரிழந்தார்.
இதனால், கழிவு நீர் கலந்த குடிநீரைக் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தங்கள் கிராமத்திற்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
0
0