“திருமணத்திற்கு இன்னும் 10 நாள் தான் அதுக்குள்ள….“ : ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி!!

30 January 2021, 12:55 pm
Accident 6 Dead - Updatenews360
Quick Share

தெலுங்கானா : தெலுங்கானாவில் நடைபெற்ற சாலை விபத்தில் பத்து நாட்களில் திருமணம் நடைபெற இருக்கும் மணப்பெண் உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள மர்ரிமிட்டா அருகே இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் 10 நாட்களில் திருமணம் நடைபெற இருக்கும் மணப்பெண் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மர்ரிமிட்டா கிராமத்தை சேர்ந்த பிரமிளாவுக்கு இன்னும் 10 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமணத்திற்கு தேவையான உடைகள் வாங்குவதற்காக பிரமிளா உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆட்டோ ஒன்றில் வாரங்கள் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

ஊரில் இருந்து சற்று தூரம் சென்ற நிலையில் அவர்கள் பயணித்த ஆட்டோ மீது எதிர்திசையில் வந்த லாரி பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் பிரமிளா அவருடைய தாய், சகோதரி, சகோதரன், ஆட்டோ டிரைவர் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். விபத்துக்கு காரணமான காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

விபத்து பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் லாரி டிரைவரை கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Views: - 0

0

0