இனி தடுப்பூசி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை : 65.5 கோடி தடுப்பூசிகளை ஆர்டர் செய்த மத்திய அரசு..!!

17 July 2021, 6:07 pm
covaxin vaccine - updatenews360
Quick Share

இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்குவதற்காக 65.5 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கூடுதலாக ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் அனைத்து மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக, மாநிலங்களுக்கு முன்பு கட்டணத்திற்கு வழங்கி வந்த தடுப்பூசிகளை இலவசமாக கொடுத்து வருகிறது. இருப்பினும், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களான சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் டிசம்பர் மாதம் வரையில் 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு போட்டுள்ளது.

அதன்படி, சீரம் நிறுவனத்திடம் ரூ.205 என்ற அடிப்படையில் 37 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளும், பாரத் பயோடெக்கிடம் ரூ.215 என்ற அடிப்படையில் 28.8 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை பெற மத்திய அரசு முடிவு செய்து ஒப்பந்தத்தை இறுதி செய்தது.

கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய முடிவு செய்துள்ளது.

Views: - 93

0

0