விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமா? கட்டுப்பாடுகளுடனே இருக்க வேண்டுமா? முடிவு உங்கள் கையில்…: உத்தவ் தாக்கரே!!

Author: Aarthi
11 October 2020, 5:55 pm
uddhav thakare - updatenews360
Quick Share

மும்பை: மராட்டியத்தில் 70 முதல் 80 சதவிகிதத்தினர் அறிகுறியில்லாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் அது மிகுந்த பலனை அளிக்கவில்லை.

இந்நிலையில், பொதுமக்களுடன் இணைய வாயிலாக பேசிய மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மராட்டியத்தில் 70 முதல் 80 சதவிகிதத்தினருக்கு கொரோனா அறிகுறியில்லாமல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான பேரில் மருந்துகள் கண்டறியும் வரை முகக்கவசம் அணிவது மட்டுமே தற்காப்புக் கவசமாக பயன்படுத்த வேண்டும்.

முகக்கவசத்தை அணிய வேண்டுமா, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமா அல்லது கட்டுப்பாடுகளுடனே இருக்க வேண்டுமா? என்பதை மக்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். தற்போது துவங்கப்பட்டுள்ள எதுவும் மீண்டும் கட்டுப்படுத்தப்படாது. அதிக அளவு மக்கள் பயணிப்பர் என்பதால் புறநகர் ரெயில் சேவை துவங்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

Views: - 47

0

0