வீட்டுக்கு போக 78,000 பேர் ரெடி…! பிஎஸ்என்எல் துறையில் விஆர்எஸ் திட்டத்துக்கு ஓகே..!

4 December 2019, 9:29 pm
BSNL Telecom - UpdateNews360
Quick Share

டெல்லி: விருப்ப ஓய்வுக்கு பிஎஸ்என்எல் துறையில் 78,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வு பெற விரும்புவோர் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான காலக் கெடுவும் முடிந்துவிட்டது.

நஷ்டத்தை குறைக்க இந்த விருப்ப ஓய்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வரை விருப்ப ஓய்வுக்கு 78,300 பேர் விண்ணப்பம் தந்துள்ளனர். 5, 237 பேர் விருப்ப ஓய்வு மனுவை திரும்ப பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை மற்றும் தமிழ்நாடு என 2 வட்டங்கள் இருக்கின்றன. அந்த 2 வட்டங்களிலும் சேர்ந்து, 8,000 பேர் விருப்ப ஓய்வை பெற விரும்புவதாக கூறி இருக்கின்றனர்.

பிஎஸ்என்எல் துறையில் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க 14 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த விருப்ப ஓய்வு மூலம் அந்த சுமை 7 ஆயிரம் கோடியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.