வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விபரத்தை வெளியிடாத 8 கட்சிகளுக்கு அபராதம் : உச்சநீதிமன்றம் அதிரடி!!
Author: Udayachandran RadhaKrishnan10 August 2021, 5:50 pm
வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விபரங்களை வெளியிடாத 8 கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் கட்சி வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை வெளியிடாத பாஜக, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய கம்யூ., லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ. ஆகிய கட்சிகள் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது.
இதில் தேசிய வாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சிகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதமும் பிற கட்சிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2020 தீர்ப்பின் படி குற்றப்பின்னணி வேட்பாளர்களின் விபரங்களை கட்சி இணையதளம், சமூக வலைதள பக்கங்கள், உள்ளூர் நாளிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0
0