8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஆட்டோ ஓட்டுநரை மரத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்!!

9 November 2020, 10:31 am
Girl Harrassed - Updatenews360
Quick Share

ஆந்திரா: திருப்பதி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி பத்மா நகரில் எட்டு வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டு இருந்த போது அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனீர் பாஷா (வயது 32) என்பவர் அந்த குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் மிரண்ட குழந்தையின் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர்,பொதுமக்கள், பெண்கள் ஆகியோர் குழந்தையை மீட்டு ஆட்டோ டிரைவர் முனீர் பாஷாவை அடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முனீர் பாஷாவை கைது செய்து பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 22

0

0