‘எங்க வீட்டில் ஒரே ஒரு அறைதான்‘ : மரத்தில் கட்டில் கட்டி தனிமைப்படுத்திய வாலிபர்!!

16 May 2021, 9:59 am
Man Isolate In Tree -Updatenews360
Quick Share

தெலுங்கானா : வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாத காரணத்தால் மரத்தின் மீது கட்டிலை கட்டி வாலிபர் ஒருவர் தன்னை தனிமைபடுத்தி கொண்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளவர்களில் பலர் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். மேலும் பலர் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் உள்ளனர்.

ஆனால் பெரும் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு செல்ல இயலாத நிலையிலும், வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள இயலாத சூழ்நிலையிலும் பலர் உள்ளனர்.

இதற்கு உதாரணமாக தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த வாலபர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில் வசதி இல்லாத காரணத்தால் மரத்தில் கட்டில் கட்டி தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நலகொண்டா மாவட்டத்திலுள்ள கொத்தனிகொண்டா கிராமத்தை சேர்ந்தவர் சிவா(வயது 25).
குடும்பத்தை சேர்ந்த 4 உறுப்பினர்களுடன் ஒற்றை அறையுடன் கூடிய வீட்டில் வசித்துவரும் சிவாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சிவா தனிமை படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். தங்களுடைய வீட்டில் ஒரே ஒரு அறை மட்டும் உள்ளதால் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்பட்டு விடும் என்று அஞ்சிய சிவா வினோத வகையில் தன்னைத் தனிமைப் படுத்தி கொண்டிருக்கிறார்.

ஒரே ஒரு அறை இருக்கும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொள்வது எப்படி என்று ஆலோசனை செய்து சிவா, இதற்காக தன்னுடைய வீட்டின் முன் இருக்கும் உயரமான மரத்தை தேர்வு செய்தார்.

அந்த மரத்தின் மீது கட்டிலை கட்டிய சிவா அதில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்.
அவருக்குக் கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகள், உணவு ஆகியவற்றை குடும்ப உறுப்பினர்கள் நேரம் தவறாமல் கயிறு மூலம் சிவாவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

வசதி இல்லாத காரணத்தால் இளைஞரின் இந்த செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் மற்றவர்களுக்கு தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இவர்களை போல ஏழை எளியோருக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 133

1

0