செல்போனில் விளையாடிய இளைஞர்..! தண்ணீருக்கு பதிலாக ஆசிட் குடித்து பலி..! இது ‘பப்ஜி’ கேம் சோகம்..!

13 December 2019, 12:02 pm
Quick Share

குவாலியர்: பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், தண்ணீருக்கு பதிலாக ஆசிட்டை குடிக்க, சம்பவ இடத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், குவாலியரைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சவுரப் யாதவ். பப்ஜி கேம் பிரியர். கிடைக்கும் நேரத்தில் எல்லாம் பப்ஜியை தட்டிக் கொண்டிருப்பார்.

அவரின் தொழில் நகைகளுக்கு பாலிஷ் போடுவது. தமது நண்பருடன் அவர் ரயிலில் குவாலியரில் இருந்து ஆக்ரா சென்று கொண்டிருந்தார். வழக்கம் போல கையில் செல்போன் எடுத்தவர், எதை பற்றியும் கவலைப்படாமல் பப்ஜி கேம் விளையாட ஆரம்பித்தார்.

நேரம் போய்க் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் தாகம் எடுக்க பையில் இருந்த தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக, ஆசிட் வைத்திருந்த பாட்டிலை திறந்து குடித்துள்ளார்.

ஒரு கணம் தான்…! அய்யோ.. அம்மா என்று அலற.. அந்த கோச்சே பதறியது. மேல் படுக்கையில் இருந்த நண்பர் சர்மா மிரண்டு போய் கீழே இறங்க பின்னரே விஷயம் புரிந்திருக்கிறது.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

1 thought on “செல்போனில் விளையாடிய இளைஞர்..! தண்ணீருக்கு பதிலாக ஆசிட் குடித்து பலி..! இது ‘பப்ஜி’ கேம் சோகம்..!

Comments are closed.