பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி வியூகம் : அமிர்தசரஸ் கோவிலில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வழிபாடு!!

21 June 2021, 7:28 pm
Punjab Kejriwal- Updatenews360
Quick Share

பஞ்சாப் : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் பொற்கோவிலில் பிரார்த்தனை செய்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் சென்றுள்ளார். அங்கிருக்கும் புகழ்பெற்ற அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 177 தொகுதிகளை உடைய பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி போன்ற பல கட்சிகள் போட்டியிட உள்ளன.

ஆளும் காங்கிரஸ் கட்சி மீது விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளராக சீக்கியரே போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அது யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இச்சூழ்நிலையில், தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் பொற்கோயிலில் பிரார்த்தனை செய்ய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 185

0

0