போதைப்பொருள் கடத்தல்..! பாலிவுட் நடன இயக்குனர் கைது..! மங்களூரு போலீசார் அதிரடி..!

19 September 2020, 12:52 pm
Kishore_Aman_Shetty_Dance_India_Drug_Case_UpdateNews360
Quick Share

மங்களூரைச் சேர்ந்த இளம் பிரபல நடன இயக்குனர் கிஷோர் ஷெட்டியை, இன்று மங்களூரில் வைத்து போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் குற்றவியல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கிஷோர் ஷெட்டி, பயிற்சி பெற்ற நடனக் கலைஞர் ஆவார். இவர் பிரபலமான டான்ஸ் ரியாலிட்டி ஷோவான டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மற்றும் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் திரைப்படமான ஏபிசிடியிலும் நடித்துள்ளார்.  

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை அடுத்து, பாலிவுட்டில் புரளும் போதைப்பொருள் விவகாரம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போதைப்பொருள் விவகாரத்தில் பாலிவுட் மற்றும் சாண்டல்வுட் நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் போதைப்பொருள் விவகாரத்தில் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கிஷோர் ஷெட்டி இதே விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிஷோர் மும்பையில் இருந்து மங்களூருக்கு போதைப்பொருள் கடத்தி சப்ளை செய்து வருவதாக, மங்களூரு காவல் துறையின் வட்டாரங்கள் தெரிவித்தன.

கிஷோர் மீது போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுவதாகவும் மங்களூரு காவல்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது நடைமுறைகள் முடிந்ததும் மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் விகாஷ் செய்தியாளர் சந்திப்பை நடத்தி முழு விபரத்தையும் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 9

0

0