திரிணாமுல் கட்சித் தலைவர் அபிஷேக் பானர்ஜி மனைவியின் குடியுரிமையில் சிக்கல்..! உள்துறையிடம் தகவல் கோரிய சிபிஐ.!

23 February 2021, 5:29 pm
Rujira_Banerjee_UpdateNews360
Quick Share

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா நாரூலாவின் குடியுரிமை விவரங்களை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளது.

தகவலறிந்த வட்டாரங்களின்படி, குடியுரிமைக்காக ருஜிரா தாக்கல் செய்த இரண்டு விண்ணப்பங்கள் இருந்தன. இந்த மனுவில், தந்தையின் பெயரின் நெடுவரிசையில்நிபான் மற்றும் குர்சரன் அஹுஜா என இரண்டு வெவ்வேறு பெயர்களை ருஜிரா குறிப்பிட்டுள்ளார். இதனால் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிபிஐ அவரது குடியுரிமை தொடர்பான விவரங்களை கோரியுள்ளது.

ருஜிரா ஒரு தாய்லாந்து நாட்டவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மார்ச் 2020’இல், மத்திய உள்துறை அமைச்சகம் ருஜிராவின் இந்திய வம்சாவளிக்கான அட்டை (பிஐஓ) மற்றும் பிற ஆவணங்களில் உள்ள முரண்பாடுகள் குறித்து ஒரு அறிவிப்பை அவருக்கு வழங்கியிருந்தது.

இந்திய வம்சாவளி அட்டை தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து 2010’இல் அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவர் இந்திய வம்சாவளி அட்டையை மாற்றி வெளிநாடு வாழ் இந்தியர் (ஓசிஐ) எனும் அங்கீகாரத்தை பெற விண்ணப்பித்தார்.

பிஐஓ’க்கான தனது ஆவணங்களில் ருஜிரா நிபானை தனது தந்தை என்று குறிப்பிட்டுள்ளார். பிஐஓ’வை ஓசிஐ’க்கு மாற்றுவதற்காக அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் ஒன்றில், அவரது தந்தையின் பெயர் குர்சரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய இந்த ஆவணம் பிப்ரவரி 13, 2013 அன்று வழங்கப்பட்ட அவரது திருமண சான்றிதழ் ஆகும்.

ஓசிஐ வைத்திருப்பவர்கள் இந்தியாவின் குடிமக்கள் அல்ல. ஆனால் அவர்கள் இந்தியாவில் வசிக்கும் போதும் ஒரு வரையறுக்கப்பட்ட உரிமைகளை அனுபவிக்கிறார்கள்.

அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உரிமையும் எந்தவொரு பொது சேவைகளுக்கான உரிமையும் இல்லை. அவர்கள் விவசாய நிலங்கள் அல்லது விவசாய சொத்துக்களில் முதலீடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று முன்னதாக, நிலக்கரி திருட்டு வழக்கில் ருஜிராவின் தொடர்பு குறித்து சிபிஐ அவரிடம் விசாரணை செய்தது.

சிபிஐ வழக்கில் பெயரிடப்பட்ட முக்கிய குற்றம் சாட்டப்பட்ட அனுல் மஜி அல்லது லாலாவிடமிருந்து அவரது வங்கி கணக்குகளில் சில பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரிக்க விரும்புகிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு நவம்பரில் இதற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 9

0

0