‘தனியே….தன்னந்தனியே’: காலியான விமானத்தில் தனி நபராகப் பயணம்…நடிகர் மாதவனின் வீடியோ..!!

Author: Aarthi Sivakumar
12 August 2021, 5:02 pm
madhvan - updatenews360
Quick Share

ஏர் இந்தியா விமானத்தில் ஒரே ஒரு பயணியாகத் தான் பயணித்தது குறித்து நடிகர் மாதவன் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

‘அமெரிகி பண்டிட்’ என்கிற திரைப்படத்தில் மாதவன், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள நடிகர் மாதவன் ஏர் இந்தியா விமானத்தில் ஏறியுள்ளார். ஆனால், அந்த விமானத்தில் இவர் இருந்த இருக்கையைத் தவிர மற்ற அத்தனை இருக்கைகளும் காலியாக இருந்தன.

தனி ஒருவராக விமானப் பயணம் மேற்கொண்டது குறித்து மாதவன் காணொலி ஒன்றைப் பதிவு செய்து பகிர்ந்துள்ளார். காலியாக இருக்கும் இருக்கைகளைத் தனது கேமராவில் பதிவு செய்திருக்கும் மாதவன், ”இது என் வாழ்வின் தனித்துவமான தருணமாக இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன். ஆச்சரியமாக அதேசமயம் வருத்தமாக இருக்கிறது. அன்பு மிக்கவர்கள் ஒருவருக்கொருவர் சேர்ந்திருக்க, இந்தச் சூழல் முடியவேண்டும் என்று கடுமையாகப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விமான நிலையத்திலும் தான் மட்டும் தனியாக இருப்பதைப் படம்பிடித்து இது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது என்று மாதவன் கூறியுள்ளார். துபாய்க்குப் பயணம் மேற்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ் வேண்டும், கோவிட் பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதியாக வேண்டும். இதன் பிறகு துபாய்க்குச் செல்ல அனுமதி கிடைக்கும்.

மாதவன் நடிப்பில் ‘ராக்கெட்ரி’ திரைப்படம் ஏற்கெனவே முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. மேலும் நெட்ஃபிளிக்ஸில் ‘டிகபுள்ட்’ என்கிற தொடரின் முதல் சீஸனில் மாதவன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Views: - 733

1

0