நியாயத்தை எடுத்துச் சொல்ல ஒருபோதும் அவசியமில்லை : காலம் பதில் சொல்லும்.. ஐடி ரெய்டு குறித்து சோனு சூட் உருக்கம்

Author: Babu Lakshmanan
21 September 2021, 7:24 am
sonu_sood_updatenews360
Quick Share

கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்த உதவிகளால் இந்தியாவையே தனது பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் நடிகர் சோனு சூட். ஏழை குடும்பத்தினருக்கான கல்வி உதவி, விவசாய குடும்பத்திற்கு உதவி என சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு வரும் அனைத்து உதவிகளையும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

அவரது உதவும் மனப்பான்மையை அறிந்த பொதுமக்கள், அவரது வீட்டை ஒரு அரசு அலுவலகம் போல நினைத்து, தங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி நாள்தோறும் கொடுத்து வருகின்றனர். அதனைப் பெற்று வரும் நடிகர் சோனு சூட்டும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். உதவும் மனம் கொண்ட அவரது செயல்களைப் பாராட்டி ஐக்கிய நாடுகளின் சபை கூட, சிறந்த மனிதநேயமிக்க விருதை வழங்கி கவுரவித்தது.

இந்த நிலையில், கடந்த 15ம் தேதி நடிகர் சோனு சூட் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், சோனு சூட் போலியான நிறுவனங்களிடமிருந்து போலியாக கடன் வாங்கி, கணக்கில் வராத சொத்தை சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளது.

வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து சோனு சூட் நேற்று கூறியதாவது:- என் அறக்கட்டளையிடம் உள்ள ஒவ்வொரு ரூபாயும், ஒரு விலை மதிப்பற்ற உயிரை காப்பாற்றுவதற்காக காத்திருக்கிறது. தேவைப்படும் மக்களுக்கு அது சென்றடையும். கடந்த சில நாட்களாக என்னை வருமான வரித் துறையில் இருந்து சந்திக்க வந்த விருந்தினர்களுடன் ‘பிஸி’யாக இருந்ததால், என்னால் அப்போது பொது சேவையில் ஈடுபட முடியவில்லை.

இப்போது மீண்டும் வந்துவிட்டேன். எல்லா நேரங்களிலும் நம் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. காலம் அதற்கு பதில் சொல்லும், எனக் கூறினார்.

Views: - 186

0

0