ஆம்புலன்ஸ் சேவை விழாவில் அசத்தல் : கியர் பைக் ஓட்டிய எம்.எல்.ஏ. ரோஜா!
7 September 2020, 6:11 pmஆந்திரா : நகரியில் பைக் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்த நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா பைக் ஓட்டி வியப்பில் ஆழ்த்தினார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி தொகுதியல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகை ரோஜா. நகரி மக்களுக்காக பல நல்ல திட்டங்களின் மூலம் நற்பெயரை எடுத்து வரும் ரோஜா, மக்களின் கவனத்தையும், ஊடகங்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்த எம்எல்ஏ ரோஜா, ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டினார். அப்போது அவர் ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்கான உரிமம் இல்லாமல் இயக்கியுள்ளார் என்ற சர்ச்சை எழுந்தது.
நகரி தொகுதியின் நம்பிக்கை பாத்திரமாக விளங்கிய ரோஜா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அரியணையில் ஏறியபோது துணை முதலமைச்சர் அல்லது அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அவருக்கு ஆந்திர தொழில் உள்கட்டமைப்பு தலைவராக பொறுப்பை ஒப்படைத்தார்.
இந்த நிலையில் நகரி அரசு மருத்துவமனைக்கு தனியர் நிறுவனம் சார்பாக இரண்டு பைக் ஆம்புலன்ஸ் வாங்கி தரப்பட்டது. இந்த சேவையை இன்று துவக்கி வைத்த ரோஜா, கியர் உள்ள பைக்கை ஓட்டி அசத்தினார். இந்த வீடியோ அங்கு கூடியிருந்த மக்களை மட்டுமல்லாமல் வீடியோ பார்ப்பவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
0
0