நடிகை கங்கனா ரணாவத், அவரது சகோதரிக்கு 3வது முறையாக மும்பை போலீசார் சம்மன்…!!

19 November 2020, 8:55 am
Quick Share

மும்பை: நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ஆகியோருக்கு மும்பை போலீசார் 3வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர்.

வெவ்வேறு மதத்தினர் இடையே பகையை தூண்டும் வகையில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரைப்பட காஸ்டிக் இயக்குனர் முனாவர் அலி என்பவர் மும்பை பாந்திரா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

உத்தரவின் பேரில் பாந்திரா போலீசார் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் பாந்திரா போலீசார் 3வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி நடிகை கங்கனா வருகிற 23ந் தேதியும், அவரது சகோதரி வருகிற 24ந் தேதியும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.