போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவில் நடிகை ரியா கைது..!

8 September 2020, 6:16 pm
Quick Share

சுஷாந்த் வழக்கில் மிகப் பெரிய திருப்புமுனையாக சுஷாந்தின் தோழி ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்படுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அவரின் தற்கொலைக்கு தோழி ரியா காரணம் என தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், ஒரு பெரிய திருப்பமாக, நடிகை ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திடம் (என்சிபி) தான் போதைப்பொருள் வாங்கியது உண்மைதான் எனவும் ஆனால் அதை ஒருபோதும் உட்கொண்டது இல்லை எனவும் ஒப்புக்கொண்டார்.

அவரது சகோதரர் உட்பட ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 3 நாள் விசாரணைக்கு பிறகு போதைப் பொருள் தடுப்பு பிரிவில் ரியா கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் சுஷாந்த் மரண வழக்கில் அவர் தற்போது கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0