முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி உருவத்தை சேலையில் நெய்த நடிகை ரோஜா: அசந்துபோன மக்கள்..!!

Author: Aarthi Sivakumar
18 September 2021, 4:49 pm
Quick Share

ஆந்திரா: விசைத்தறி தொழில் திட்டத்தை தொடங்கி வைக்கும் போது நடிகை ரோஜா ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் உருவத்தை சேலையில் நெய்து அசத்தியுள்ளார்.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் உருவத்தை விசைத்தறி இயந்திரம் மூலம் நடிகை ரோஜா சேலையில் நெய்தார்.

நகரி நகராட்சி சார்பில் விசைத்தறி இயந்திரத்தின் மூலம் வேலை இல்லாத இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கி விசைத்தறி தொழில் செய்யும் திட்டத்தை நடிகை ரோஜா தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகரி தொகுதியில் விசைத்தறி தொழிலில் ஈடுபட நினைப்பவர்கள், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு தக்க உதவிகள் செய்து தரப்படும் என்றார். ஜெகன்மோகன் ரெட்டியின் உருவப்படத்தை சேலையில் நெய்தது அனைவரையும் ஆச்சர்யமடையச் செய்துள்ளது.

Views: - 216

0

0