நாட்டிலேயே முதன்முறை.. அவசர தேவைக்காக ஆகாய மார்க்கமாக மருந்து : மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2021, 9:03 pm
Telangana Drone Medicine -Updatenews360
Quick Share

தெலுங்கானா : அவசர தேவைக்கு ஆகாய மார்க்கமாக மருத்துவமனைகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து வினியோகம் செய்ய புதிய திட்டம் துவங்கப்பட்டது.

மத்திய அரசின் நிதி ஆயோக் மற்றும் வோர்ல்ட் எக்கனாமிக் போரம் ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து அவசர தேவைக்கு ஆகாய மார்க்கமாக மருந்து பொருட்கள் என்ற திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி ராமராவ் ஆகியோர் தெலுங்கானா மாநிலம் விகாராபாத்தில் இன்று துவக்கி வைத்தனர்.

அவசர தேவைக்கு ஆகாய மார்க்கமாக மருந்து என்னும் திட்டம் மூலம் மருந்துப் பொருட்களை ட்ரோன் மூலம் கொண்டுசேர்க்கும் திட்டம் தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்ட தலைநகரில் இன்று துவக்கப்பட்டது.

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, தெலுங்கானா மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர அபிவிருத்தி துறை அமைச்சர் கே. டி. ராமாராவ் ஆகியோர் இந்த புதிய திட்டத்தை துவக்கி வைத்தனர்.

அவசர தேவைக்கு ஆகாய மார்க்கமாக மருந்து என்ற இந்த புதிய திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கும், தடுப்பூசிகள் போன்றவற்றை சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கும் அவசர தேவைக்கு ஆகாய மார்க்கமாக மருந்து என்ற இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும். நாட்டிலேயே முதல் முறையாக இந்த திட்டம் தெலுங்கானா மாநிலம் விகாராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Views: - 167

0

0