புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்பு ‘ஜீரோ’: சுகாதாரத்துறை அறிவிப்பு!!

11 July 2021, 5:41 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதிக்கு பிறகு கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, புதுச்சேரி மாநிலத்தில் 5,821 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 118 பேருக்கும், காரைக்காலில் 16 பேருக்கும், ஏனாமில் 4 பேருக்கும், மாஹேவில் 7 பேருக்கும் என, மொத்தம் 145 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. கடந்த ஏப்ரல் 9ம் தேதிக்குப் பிறகு தற்போது உயிரிழப்பு இல்லை. ஆரம்பத்தில் குறைவாக இருந்த உயிரிழப்பு, படிப்படியாக அதிகரித்து மே 23ம் தேதி உச்சத்தில் இருந்தது. அன்றைய தினம் அதிகபட்சமாக 34 பேர் வரை கொரோனாவால் உயிரிழந்தனர்.

இந்நிலையில், படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது உயிரிழப்பு இல்லை. இதன் மூலம் 3 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,769 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 384

0

0