நேபாள எல்லையில் இந்திய எதிர்ப்புப் போராட்டங்கள்..? பணம் கொடுத்து ஆள் திரட்டும் சீனா..! மோப்பம் பிடித்த உளவுத்துறை..!

3 September 2020, 3:15 pm
China_Nepal_UpdateNews360
Quick Share

கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் ஒரு மாத கால எல்லை மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தோ-நேபாள எல்லையில் இந்தியா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு டிராகன் சீனா நிதியுதவி அளிப்பதை புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தோ-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்த நேபாளத்தில் உள்ள பல அமைப்பாளர்களுக்கு சீனா ரூ 2.5 கோடியை செலுத்தியதாக உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

“நேபாளத்தின் சீன தூதரகம், இந்தியா-நேபாள எல்லைப் பகுதிகளில் இந்தியா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்துவதற்கு ரூ 2.5 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது.” என உளவுத்துறையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. இந்திய நேபாள எல்லை 1,700 கிமீ நீளம் கொண்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.

உத்தரகண்ட் மாநிலத்தில் தர்ச்சுலாவுடன் லிபுலேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சாலையை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 2020 மே 8 அன்று திறந்து வைத்ததை அடுத்து இந்தியா-நேபாள உறவுகள் கசக்க ஆரம்பித்தன.

நேபாள கம்யூனிஸ்ட் அரசு சாலையின் திறப்புக்கு எதிராக பேசியதுடன், லிபுலேக், கலபானி மற்றும் லிம்பியதுராவை அதன் பிரதேசங்களாகக் காட்டும் புதிய வரைபடத்துடன் பிரச்சினையை சிக்கலாக்கியது. மூன்று இந்திய பிரதேசங்களை உள்ளடக்கிய நாட்டின் வரைபடத்தை புதுப்பிப்பதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவையும் பாராளுமன்றத்தில் ஜூன் மாதம் ஒருமனதாக நிறைவேற்றியது.

நேபாளத்தின் முடிவுக்கு இந்தியா கடுமையாக எதிர்த்தது. “இந்த செயற்கையான கூற்றுக்கள் வரலாற்று உண்மை அல்லது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நமது தற்போதைய புரிதலை மீறுவதாகும்.” எனத் தெரிவித்த இந்தியா மேலும், இதன் பின்னால் சீனாவின் தூண்டுதல் இருப்பதாக மறைமுகமாகக் குறிப்பிட்டது.

ஒரு பக்கம் லடாக் எல்லையில் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து அடாவடியில் ஈடுபட்டு வரும் நிலையில், நேபாள எல்லையிலும் இந்திய எதிர்ப்பு போராட்டங்களை பணம் கொடுத்து முன்னெடுப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 8

0

0