இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: இந்தியாவின் சோதனையால் மிரளும் நாடுகள்

Author: Udhayakumar Raman
27 October 2021, 11:23 pm
Quick Share

5,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா தனது பாதுகாப்பு பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள எதிரிகளை தாக்கும் வகையில் பல ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவு ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Views: - 219

1

0