“நீங்க தான் ஜெயிக்க வைக்கணும்”..! 2022 சட்டமன்றத் தேர்தலுக்காக பிரஷாந்த் கிஷோருடன் டீல் போட்ட அமரீந்தர் சிங்..!

1 March 2021, 4:55 pm
Amarinder_Singh_Prashant_Kishor_UpdateNews360
Quick Share

தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக இணைத்துக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022’இல் பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னதாகவே பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனையின் படி தேர்தல் பணிகளை அமரீந்தர் சிங் தொடங்குகிறார்.

2017 சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிடும் பணியை பிரஷாந்த் கிஷோர் தான் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமரீந்தர் சிங் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், பஞ்சாபின் முன்னேற்றத்திற்காக பிரஷாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

தற்போது, பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் குழு, தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக்க திமுகவின் தேர்தல் பணிகளை திட்டமிட்டு வருகிறது. பொதுமக்களால் கேலிக்கு உள்ளானாலும் “எல்லோரும் நம்முடன், ஒன்றிணைவோம் வா, மக்கள் குரல்” என முக ஸ்டாலினை முன்வைத்து தொடர் பிரச்சாரத்தை பிரஷாந்த் கிஷோரின் குழுவின் கீழ் திமுக தலைமை செய்து வருகிறது. 

மேலும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிடுவதிலும் இவரின் குழு ஈடுபட்டுள்ளது. திரிணாமுல் கட்சி கடந்த வாரம் உருவாக்கிய “பங்களா நிஜர் மெய்கேய் சாயே” எனும் முழக்கம் பிரஷாந்த் கிஷோர் மற்றும் அவரது குழுவினரால் திட்டமிடப்பட்டு கருத்துருவாக்கப்பட்டது.

முன்னதாக 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கங்களைத் தாண்டினால், கிஷோர் ட்விட்டரில் இருந்து விலகுவதாக உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 12

0

0