அவசர அவசரமாக பிரதமர் மோடியை சந்தித்த அதிமுக எம்பி தம்பிதுரை : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!

1 February 2021, 5:22 pm
Thambidurai Meet Modi- Updatenews360
Quick Share

டெல்லி : பிரதமர் மேடியை அதிமுக எம்பி தம்பிதுரை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த கிழ்வுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற அதிமுக எம்பி தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டடங்களுக்காக பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தாகவும், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்காக சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்ததாக கூறினார்.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அதிமுக எம்பி தம்பிதுறை, முன்னாள் மக்களை துணை சபாநாயகராக பொறுப்பேற்றிருந்தது நினைவு கூரத்தக்கது. மேலும் சசிகலா விடுதலையாகியுள்ள சூழ்நிலையில், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரா தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதே போல தமிழகத்தில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி பிரதமர் மோடி வருகை தர உள்ளதால் அரசியலில் திருப்பங்கள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதே நாளில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் தமிழகத்திற்கு வருதை தர உள்ளார்.

Views: - 0

0

0