தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கும் ஆகாஷ்-என்ஜி ஏவுகணை: ஒடிசாவில் சோதனை வெற்றி..!!

Author: Aarthi
23 July 2021, 6:33 pm
Quick Share

புதுடெல்லி: தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. தரையில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் வானில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை இதுவாகும் ஆகும்.

இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, புதிய தலைமுறை ஏவுகணையான ஆகாஷ் ஏவுகணை இன்று காலை 11:45 மணிக்கு, ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

DRDO, Akash-NG, Missile, Balasore, ஆகாஷ், ஏவுகணை, டிஆர்டிஓ, சோதனை,

ஆளில்லாத வானில் இருந்த இலக்கை, ஏவுகணை வெற்றிகரமாக தாக்கியது. மழை அல்லது வெயில் காலத்திலும் இந்த ஏவுகணையை ஏவ முடியும். இந்திய விமானப்படை அதிகாரிகள், பெல் மற்றும் பிடிஎல் நிறுவன அதிகாரிகளும் இந்த சோதனையில் கலந்து கொண்டனர்.

ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார். விஞ்ஞானிகளுக்கு டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டியும் பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Views: - 202

0

0