குடித்துவிட்டு தொல்லை கொடுத்த இளைஞர்..! அடித்தே கொன்ற உறவினர்கள்..!

13 January 2021, 8:18 pm
Death_UpdateNews360
Quick Share

ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் குடிபோதையில் தொடர்ந்து தொல்லைகளை உருவாக்கியதால் அவரது உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை ஹண்டபா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடலிமுண்டா கிராமத்தில் நடந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, அந்த நபர் ஒரு மரத்தில் கட்டப்பட்டு, அவர் மீது பெட்ரோல் தெளித்த பின்னர் தீவைத்து எரிக்கப்பட்டார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

“முதற்கட்ட விசாரணையில், இறந்தவர், ராஜ் கிஷோர் பிரதான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அடிக்கடி மது அருந்தி அடாவடியில் ஈடுபட்டதால், அவரது உறவினர்கள் அவரை தொடர்ந்து மோசமாக நடத்தி வந்துள்ளனர்.” என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

பிரதானின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply