முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள்: டிசம்பர் 1ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு…!!

19 October 2020, 5:41 pm
AICTE - updatenews360
Quick Share

முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் டிசம்பர் 1ம் தேதிக்குள் தொடங்கும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளநிலை முதலாம் ஆண்டு மற்றும் நேரடி 2ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மாணவர் சேர்க்கையை அக்டோபர் இறுதிக்குள் முடித்து நவம்பர் முதல் வாரத்தில் வகுப்புகளை தொடங்க வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ. ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஆனால், மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை வந்ததையடுத்து நவம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் நேரடி 2ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 1ம் தேதிக்குள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 16

0

0