கேரளாவில் கடற்கரைகளை தவிர அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று முதல் திறப்பு…!!

Author: Aarthi
12 October 2020, 8:30 am
kerala - updatenews360
Quick Share

கேரளா: கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா தளங்களில், கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கடற்கரைகள் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையிலும், சுற்றுலாத் துறையை புதுப்பிக்கும் முயற்சியில் மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டுதல்களையும் மாநில அரசு வெளியிட்டுள்ளது. சுற்றுலா இடங்களை பார்வையிடும்போது பயணிகள் அனைத்து கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

7 நாட்களுக்குள் குறுகிய பயணங்களுக்கு கேரளாவுக்குள் நுழையும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு சான்றிதழ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசங்கள், சானிடைசரை பயன்படுத்துவது மற்றும் 2 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

Views: - 41

0

0